Saturday, October 3, 2009

பிட்டு - 67

1. கோமா ஸ்டேஜ்ல இருக்கற தலைவருக்கு நினைவு திரும்புமா ?

கீழே சில்லறை விழற சத்தம் கேட்டா மட்டும் காது துடிக்குது, மற்றபடி ஒரு முன்னேற்றமும் இல்லை

==========

2. பஸ்ஸில் உன் பக்கத்தில் அழகான இளம்பெண் உட்கார்ந்ததுக்காக சந்தோஷப்படாமல் ஏன் வருத்தப் படறீங்க ?

எப்படி சந்தோஷப்பட முடியும் ? வயசுப் பொண்ணு கூச்சமில்லாம நம்ம பக்கத்துல உட்கார்ந்தா என்ன அர்த்தம் ? நம்மை வயசானவனா நினைக்கிறாள்னு தானே அர்த்தம்

==========

3. ”அம்மா, கல்யாணப் பொண்ணுக்கு மட்டும் ஏன் வெள்ளை டிரஸ் போடறாங்க ?” ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள அம்மாவுடன் சர்ச்சுக்குப் போன சுட்டிப் பெண் கேட்டாள்.

”ஏன்னா, வெள்ளை நிறம்தான் சந்தோஷத்தின் அடையாளம். தவிர, இன்னிக்குத்தான் அந்தப் பெண்ணோட வாழ்க்கையில் சந்தோஷமான நாள்.. .”

அம்மா பதில் சொல்லி முடிக்கும் முன்பே அடுத்த கேள்வி வந்தது. ”சரி.. . கல்யாண மாப்பிள்ளைக்கும் மட்டும் கறுப்பு ஸூட் போடறாங்களே .. . அது ஏன் ?” அம்மா வாயடைத்துப்

போனாள்.

==========

4. மவுண்ட் ரோட்டுல எருமை மாடு திடீர்னு ஓடிவந்துடுச்சு

ஐயையோ .. .

அப்புறம்.. .?

டிராபிக் போலீஸ்காரர் பார்த்துட்டு, மாட்டுக்கிட்டே பாலையும் மாட்டுக்காரன்கிட்டே பணத்தையும் கறந்துட்டாரு.

==========

5. ஆடி மாசம் பிறந்ததுக்கு உன் கணவர் ஏன் அவங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டாரு ?

பின்ன அவருதான் என் விட்டோ மாப்பிள்ளையாச்சே.

==========

6. இன்னிக்கு அவருக்கு ஓசிப் பத்திரிகை கிடைக்கலையா ?

ஏன் ?

பத்திரிகை தர்மமே இல்லாமப் போச்சுன்னு புலம்பிக்கிட்டுப் போறhரே.. .

==========

7. நான் சொல்ல வேண்டிய விஷயத்தை மத்தவங்ககிட்டே சொல்லும் போது வேற எதையே சொல்லிடறேன் டாக்டர்

இதுதான் உங்க பிரச்சினையா ?

அது இல்லை, வேற ஏதோ டாக்டர்

==========


அப்புறம் கடைசியா இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. நான் நினைப்பேன்.. . அவர் கொடுத்துடுவார்.. .

என்ன ?

முத்தம்தான்.. .

மேட்ஃபார் ”இச்” அதர்-னு சொல்லு

No comments:

Post a Comment